அனுமதிப்பத்திரமற்ற பயணிகள் பேருந்துகளுக்கான அபராதம் அதிகரிப்பு – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

அனுமதிப் பத்திரமின்றி பயணிக்கும் மாகாண பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை மேலும் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
இதுவரை விதிக்கப்பட்ட 2 இலட்சம் ரூபா அபராதத் தொகையை தற்போது 5 இலட்சமாக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களில் வீதி அனுமதிப்பத்திரம் இன்றி 200 பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன. குறித்த இந்த அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுவதனால் அனுமதிப்பத்திரத்துடன் சேவையில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கிப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.
இவ்வாறு அனுமதிப் பத்திரங்களின்றி பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதால், அபராத தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்தாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|