அனுமதித்தது இந்தியா: மகிழ்ச்சியில் வடபகுதி பக்தர்கள் !

Saturday, December 23rd, 2017

திருவாதிரை உற்சவத்திற்காக பக்தர்கள் சிதம்பரத்திற்கு செல்வதற்கு காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு பயணிகள் கப்பல் சேவையை நடத்த இந்திய அரசாங்கம்அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டிசெம்பர் 24ஆம் திகதி முதல் ஜனவரி 3ஆம் திகதி வரை “சிதம்பரம்நடராஜர் ஆலயத்தில் இடம்பெறும் மார்கழி திருவாதிரை திருவிழாவில் (ஆருத்திரா தரிசனம்) இலங்கையின் வடபகுதியில் உள்ள சிவ பக்தர்கள் பங்கேற்பதற்கு இந்தியஅரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்காக காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு பயணிகள் கப்பல் சேவைகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளன. இந்த விழாவில் அதிக பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் திருவெம்பாவை என அழைக்கப்படும் மார்கழி மாத திருவாதிரைத் திருவிழாவானது இலங்கைத் தமிழ் மக்களின் முக்கியமான விரத அனுட்டானங்களுள்ஒன்றாகும். இந்த நாட்களில் அதிகாலை வேளையில் திருவெம்பாவைத் திருப்பாடல்களை ஓதுவது வழக்கமான விடயமாகும்.

Related posts: