அனர்த்த பாதிப்புகளுக்கு ஐ.நா. கவலை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்த நிலைமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த நாட்களில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 202ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாக்கிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதினம் இன்று !
அடுத்த மாதம் நல்லிணக்க ஆலோசனை செயலணியின் அறிக்கை!
டெங்குவை விரட்ட மாற்றுவியூகம் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை!
|
|