அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு படகு: கடற்படையினரால் 32 பேர் கைது!

Monday, May 1st, 2017

காங்கேசன்துறை கடற்பகுதியில் அத்துமீறி உள்நுழைந்த 32 பேர் கொண்ட வெளிநாட்டு படகொன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த படகு காங்கேசன்துறையில் பிரதேசத்தில் இருந்து 12 கடல் மைல் தூரத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று(30) காலை குறித்த படகு சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.குறித்த படகில் இந்தியாவைச் சேர்ந்த 2 பேர், மியன்மாரைச் சேர்ந்த 14 பேர் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

பாடத்திட்டங்களை புதுப்பித்தல் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீர...
எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக மீண்டும் வரையறுக்கப்பட்ட அளவில் எரிபொருள் - இலங்கை பெற்றோலிய ...
இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி மியன்மாரினால் அன்பளிப்பு - இறுதியில் இலங்கைவந்தடையும் எனவும் எதி...