அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதற்கு புதிய திட்டம் – சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவிப்பு!
Saturday, May 7th, 2022
அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதற்கு புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த மாதத்தில் மாத்திரம் 106 மருந்துகள் மற்றும் 38 மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் 2 வாரங்களில் 17 மருந்து வகைகளையும், 81 மருத்துவ உபகரணங்களையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.
000
Related posts:
நடுக்கடலில் விபத்துக்குள்ளான இந்தியக் கப்பல் - காப்பாற்றியது இலங்கை கடற்படை!
மாகாணசபை ஆட்சியின் பின்னரே வடக்கின் கல்வி வீழ்ச்சி: இறுதி நிலையில் கிளிநொச்சி மாவட்டம் மாவட்டம் - ...
கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவித்த 20 இலங்கையர்களுக்கு விடுதலை - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம...
|
|
|


