அத்தியாவசிய நோயாளிகளுக்கு போதுமான இரத்தக் கூறுகள் உள்ளன – தேசிய இரத்த வங்கி அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022

மத்திய இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக்குறை இருந்தபோதிலும், அவசர சத்திர சிகிச்சை, விபத்துகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்குள்ளான அனைத்து நோயாளிகளுக்கும் போதுமான இரத்தக் கூறுகள் வழங்கப்படுவதாக தேசிய இரத்த வங்கி கூறுகிறது.

இறக்குமதியைச் சார்ந்து 100% விநியோகச் சங்கிலி இருப்பதால் அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றாக்குறை தேசிய இரத்த விநியோக அமைப்பில் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் மருத்துவர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்தார்.

எனினும், தேசிய இரத்த விநியோக அமைப்பு பூச்சிய விநியோக நிலையை எட்டவில்லை என்றாலும், விநியோக செயல்முறை ஓரளவு மோசமடைந்துள்ளது.

தற்போதுள்ள இரத்த இருப்புக்களை ஒரு மாதம் அல்லது சுமார் ஒன்றரை மாதங்களுக்கு நிர்வகிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: