அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு ஒளடதங்கள் கைவசம் உள்ளன – சுகாதார அமைச்சு அறிவிப்பு!
Wednesday, July 5th, 2023
அனைத்து அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு ஒளடதங்களும், தம்வசம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அவசர நிலைமை ஏற்பட்டால், அதற்கு முகங்கொடுக்கத் தயார் என, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக்க ஸ்ரீ சந்தரகுப்த தெரிவித்துள்ளார்.
ஹொரண பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், 350 அத்தியவசிய ஒளடதங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 100 ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எவ்வாறிருப்பினும், ஒளடதங்கள் தங்களுக்கு தொடர்ச்சியாக கிடைத்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ் போதனா வைத்தியசாலையில் போராட்டம்!
பாராளுமன்ற ஆசனத்தில் மாற்றம்!
சாட்சிய பதிவுகளுக்கு ஊடகங்களை அனுமதிப்பதில்லை - நாடாளுமன்ற தெரிவுக்குழு!
|
|
|


