அதிவேக நெடுஞ்சாலையில் விசேட சுற்றிவளைப்பு!
Saturday, April 17th, 2021
அதிவேக நெடுஞ்சாலையில் இன்றும், நாளையும் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாட்களில் வாகன சாரதிகள் அவதானமாக செயற்பட வேண்டும்.
குறிப்பாக பண்டிகை விடுமுறைகளுக்காக தமது சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் கொழும்பு நோக்கி பயணிப்பவர்கள் வீதி சட்டங்களை உரிய முறையில் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அவ்வாறு வீதி சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் காலமானார்!
நிர்மாணத்துறையின் சவால்களை வெற்றிகொள்ள உடனடி நடவடிக்கை - ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 14 பேர்...
|
|
|


