நிறைவுக்கு வந்தது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பெயர்களை உள்ளிடுவதற்கான கால அவகாசம் – தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு!
Tuesday, November 1st, 2022
2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பெயர்களை உள்ளிடுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வாக்காளர் பட்டியலை உறுதிப்படுத்தும் பணி நேற்று (31) இடம்பெற்றதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இதுவரை பெயர் சேர்க்க முடியாதவர்கள், அடுத்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கலாம்.
எவ்வாறாயினும், முதன்முறையாக வாக்களிக்க விரும்பும் நபர்களுக்கு மாத்திரம் நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என நிமல் ஜி.புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சைட்டம் மாணவர்களுக்கு இலங்கை மருத்துவச் சபையின் அங்கீகார பட்டம்!
ஊர்காவற்றுறை சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய இராட்சத கடல்வாழ் உயிரினம்!
யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதி திறந்துவைப்பு!
|
|
|


