அதிபர் சேவையில் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்கு குழு நியமனம் – கல்வி அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!

இலங்கை அதிபர் சேவையின் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை சம்பிரதாயபூர்வமாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார உட்பட கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் ஐந்து நிபுணர்களைக் கொண்ட குழு ஏற்கனவே தனது பணிகளை ஆரம்பித்துள்ளது
அனைத்து அதிபர்கள் சங்கங்களும் தங்களின் முன்மொழிவுகளைப் பெற்று, மிக முக்கியமான விஷயங்களை முன்வைக்க மே 9ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மே 15 முதல் தொழிற்சங்க அமைப்புகளுடன் நேர்காணல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கல்வித்துறை வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களிடம் கேட்டறிந்து மாகாண வலய அலுவலகங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடசாலைகளுக்கு சென்று தற்போதைய நிலவரத்தை அறிந்துகொள்ள உள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
அதிபரின் பங்கு, உத்தேச கல்வி சீர்திருத்தங்களை பிரயோகித்து அதிபரின் சேவையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்மொழியுமாறு அமைச்சர் இங்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்தக் குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|