அதிபர் இடமாற்றத்தில் முறைகேடு : கல்வி அமைச்சை குற்றம் சாட்டுகிறது இலங்கை ஆசிரியர் சங்கம்!

தேசிய பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுமார் 265 பாடசாலைகளில் அதிபர்கள் இல்லாத நிலையில் பதில் அதிபர்கள் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வழங்கப்பட்ட ஆசிரியர் இடமாற்றத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் இனியும் ஏற்படாதிருக்க கல்வி அமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. இதனை அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே தேசிய பாடசாலைகளில் 8 ஆண்டுகள் சேவையாற்றிய அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கான அனுமதிக்காக மற்றுமொரு சுற்றறிக்கை அரச நிர்வாக ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|