அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்!

Monday, March 11th, 2019

எதிர்வரும் 13ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை மீள வழங்குதல், ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடுகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறித்த சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்திருந்தார்.

Related posts: