அதிபர்களுக்கு உள்ளக பயிற்சி ஆரம்பம்!

Friday, October 4th, 2019

புதிதாக கல்வி அமைச்சினால் இணைத்துக் கொள்ளப்பட்ட 1858 அதிபர்களுக்கு நேற்றுமுதல் மகரம கல்வியற் கல்லூரியில் உள்ளக பயிற்சி ஆரம்பமானது.

இது தொடர்பான நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிவசம் உரையாற்றினார். கல்வித் துறையில் உயர்தர வகுப்பு மாணவர்கள் டெப் கணனியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போழுது வசதி செய்யப்பட்டுள்ளது.

இது இலவச கல்வியில் ஏற்பட்ட பாரிய புரட்சியாகும். இந்த புரட்சி விளையாட்டிற்குரிய விடயம் அல்ல. சர்வதேசத்துடன் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப கல்வி துறையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் தொரிவித்தார்.

Related posts:


மழையால் பாதிக்கப்பட்டுள்ள பூம்புகார் பகுதி மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் உதவிகள் வழங்கிவைப்பு...
தேர்தல் குறித்து சகல தரப்புடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுபக்கப்படும் – அமைச்சர் ஜனக பண்டார தென்னக...
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் - டெல்லியின் நிலைப்பாடு இதுதா...