அதிக விலைக்கு விற்பனை – வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!
Tuesday, November 5th, 2019
சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டை பயன்படுத்தி சமையல் எரிவாயுவை மறைத்து வைத்து அதிக விலையில் விற்பனை செய்த 37 வர்த்தவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சில வர்த்தவர்கள், எரிவாயு கொள்கலன்களை மறைத்து வைத்து, விற்பனை செய்து வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் சேவைகள் அதிகார சபை எச்சரித்துள்ளது.
இதேவேளை, தற்பொழுது சந்தையில் நிலவும் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டிற்கு தீர்வாக 12 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நிதி அமைச்சிற்கு உட்பட்ட லிற்றோ காஸ் நிறுவனத்தின் மூலம் இதனை இறக்குமதி செய்து உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் கப்பல் ஒன்று கடந்த சனிக்கிழமை துறைமுகத்தை வந்தடைந்தள்ளதுடன், நாளை மற்றுமொரு கப்பல் 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
|
|
|


