அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Monday, February 22nd, 2021
அரச கட்டுப்பாட்டில் கீழ் உள்ள விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் அனைத்து வியாபாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரி வித்துள்ளார்.
இதேநேரம் நாட்டில் தற்போது கொரோனா தொற்று நிலைமை காரணமாக மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் வியாபாரிகளை மகிழ்விக்க விரும்பவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 27 அத்தியாவசிய பொருட் களைச் சலுகை விலையில் விற்கும் திட்டத்தைக் கூட்டுறவு வலை யமைப்பு ஊடாக விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் எட்டப்படும் என்று கண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்!
கரைநகர் கடற் பரப்பில் சட்ட விரோத கடற் றொழிலில் ஈடுபட்ட இந்திய றோலர் மீன்பிடிப் படகுடன் 6 பேர் கடற்ப...
ஒற்றையாட்சி அரசில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – விசேட உரையில் ஜனாதிபத...
|
|
|


