அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆராயப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, February 19th, 2021

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்..

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –

சில பகுதிகளில் தொடர்ச்சியாக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்களாயின் அவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை வழங்கப்படும்.

உதாரணமாக, நாரஹென்பிட்டியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி செயல்பாட்டில் கொரோனா ஆபத்தான பகுதிகளை கவனத்தில் எடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு வழங்கியுள்ளார் என்றும் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் நகரங்கள், கிராமங்கள் அல்லது கிராம சேவகர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டு, அந்த பகுதிகளில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பமாகும் என்று அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: