அதிகளவில் ஒன்று கூடுவதை தவிருங்கள் – அடியவர்களிடம் நல்லூர் தேர் உற்சவம் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் கோரிக்கை!
Saturday, August 15th, 2020
கொரோணா சூழ்நிலையை கருத்தில் கொண்டு நல்லூர் தேர் உற்சவத்திற்கு அடியவர்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரியுள்ளார்.
நாளை மறுதினம் நல்லூர் ஆலய தேர் உற்சவம் மிகவும் விமரிசையாக இடம்பெறவுள்ள நிலையில் தற்போது உள்ள கொரோணா நிலைமையினை கருத்திற் கொண்டு மக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதனிடையே நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிக விமரிசையாக நடைபெற்று வருகின்ற நிலையில் முருகப்பெருமானின் தேர்த் திருவிழா எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதுடன் மறுநாள் 18 ஆம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிளிநொச்சி மாவட்ட ஆண்டிறுதி ஒன்றுகூடலில் ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்ப...
சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பம் - ஒரு வாரத்தில் நிறைவடையும் என எதிர்பார்ப...
400 கோடி ரூபா சொகுசு வாகன பதிவு மோசடி - ஊழல் ஒழிப்பு அதிரடிப் பிரிவினரால் ஒருவர் கைது!
|
|
|


