400 கோடி ரூபா சொகுசு வாகன பதிவு மோசடி – ஊழல் ஒழிப்பு அதிரடிப் பிரிவினரால் ஒருவர் கைது!

Friday, August 11th, 2023

400 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதி கொண்ட பல சொகுசு வாகனங்களை பதிவு செய்த பாரிய மோசடி ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (10) மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தின் ஆவணக் காப்பக அதிகாரி ஒருவரும் இந்த மோசடிக்கு தலைமை தாங்கிய மற்றுமொருவரும் பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 423 சொகுசு வாகனங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக வலான ஊழல் தடுப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சொகுசு வாகன பதிவு தொடர்பான விசாரணையில், இந்த பாரிய மோசடி தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையக அதிகாரியிடமிருந்தும் போலியாக பதிவு செய்யப்பட்ட சொகுசு வாகனம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடிக்கு ஆதரவாக செயற்பட்ட மற்றுமொரு குழுவினர் தொடர்பிலான தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஊழல் தடுப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: