அதிகளவிலான அறுவடை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, February 13th, 2021

நாட்டில் நாளொன்றில் அதிகளவிலான வயல்களில் அறுவடை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவசாய அமைச்சின் ஆலோசனை குழு கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வயல் மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைகளில் ஈடுப்பட்டுள்ள இளைஞர்களுக்கும் கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 5 ஏக்கர் உரிமை உடைய விவசாயிக்கு வழங்கப்படும் துப்பாக்கி அனுமதிப்பத்திரத்தை 1 ஏக்கர் சொந்தமுடைய விவசாயிகளுக்கும் வழங்கும் விதமாக சுற்றுநிரூபம் திருத்தம் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

பன்றிகள், குரங்குகள் போன்ற விலங்குகளால் விவசாயிகள் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் இருந்து விலகுவதால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது;

Related posts: