அதிகரித்த ஒலிபெருக்கியின் சத்தங்களினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு – பெற்றோர் குமுறல்!

Friday, October 20th, 2023

யாழிலுள்ள ஆலயங்களின் அதிகரித்த ஒலிபெருக்கியின் சத்தங்களினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாடசாலைகளில் தற்போது தவணைப் பரீட்சைகள் இடம்பெற்றுவரும் நிலையில் ஆலயங்களில் நவராத்திரியை முன்னிட்டு அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் அலறவிடப்படுகின்றன.

இதனால் பரீட்சைக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபடும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக  பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

நவராத்திரி காலப்பகுதியில் ஆலயங்களில் ஏட்டிக்குப் போட்டியாக ஒலிபெருக்கிகள் ஒலிக்கவிடப்படுகின்ற நிலையில் மாணவர்களின் கல்வியை கருத்திற்கொண்டு இவ் விடயம் தொடர்பில் ஆலயங்களின் நிர்வாகத்தினர் கவனம் செலுத்துமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை கடந்த காலங்களில் ஒலிபெருக்கி பாவனை தொடர்பில் பல்வேறுபட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பினும் இன்று வரை குறித்த பிரச்சினை நீண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: