அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவு – அதிகளவு மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகல் – இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டு!

தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவு காரணமாக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பல மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மத்திய மாகாணத்தில் மாத்திரம் கடந்த வருடத்தில் 1,989 மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் 570 மாணவர்களும், ஹட்டனில் 541 மாணவர்களும், கொத்மலையில் 319 மாணவர்களும், கம்பளையில் 250 மாணவர்களும் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளனர்.
தற்போதைய பொருளாதார நிலையினால் மாணவர்களின் இடைவிலகல் அதிகரிப்படுமே தவிர குறைவடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
பழச்சாறு தயாரிப்பு : சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைப்பு!
இலங்கை - ஐக்கிய அரபு இராச்சியம் இடையே உத்தேசிக்கப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தை, விரைவில் இ...
முச்சக்கரவண்டி சாரதிகள் அனைவரையும் பதிவு செய்து தரவுத் தொகுதியொன்றை தயாரிக்கும் வகையில், QR குறியீட்...
|
|