அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதியை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்!
Friday, August 2nd, 2024
மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு, இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதியை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இந்த மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.
S.துரைராஜா, A.H.M.D.நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கபுலி ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
சுகாதார நடைமுறையை பேணும் வகையில் மரண வீட்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு - சுகாதார சேவைகள் பணிப...
யாழ் பண்ணைப் பகுதியில் எலும்புக்கூடு மீட்பு - தீவிர விசாரணையில் பொலிஸார்!
ரஷ்யா - உக்ரைன் போர்ப் பதற்றம் - உக்ரைனுக்கு போர் விமானங்கள் அனுப்ப மாட்டோம் என்று போலந்து அறிவிப்ப...
|
|
|


