அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வருகிறது அபராதத் தொகை!
Saturday, August 12th, 2017
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகை அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா ஆக்க குறைந்தது அபாரதமாக விதிக்கப்படவுள்ளது. சாரதி அனுமதிபத்திரமின்றி வாகனம் செலுத்துதல், போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்துதல், அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி இன்றி வாகனம செலுத்துதல், தொடருந்து பாதையில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல் போன்ற குற்றங்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்படவுள்ளது
அத்துடன், அதிவேகத்தில் வாகனத்தை செலுத்துதல், வயது குறைந்தோர் வாகனம் செலுத்துதல், இடதுபக்கம் முன்னோக்கி செல்லல் போன்ற குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட அபராத தொகை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கலால் திணக்களத்தின் வருமானம் 400% உயர்வு!
ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் ஒரு எல்லை உள்ளது - ஜனநாயகத்தை மீறினால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் ...
பொறியியல் துறை மற்றும் நிர்மாணத்துறைகளில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண...
|
|
|


