அடுத்த வாரம்முதல் தபால் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பம் – தபால் திணைக்களம்!
Friday, April 17th, 2020
தடைப்பட்டுள்ள தபால் விநியோக நடவடிக்க்கைகள் அடுத்த வாரம்முதல் செய்யப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக, நாடுமுழுவதும் ஊரடங்கச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் கடந்த ஒரு மாத காலமாக தபால் விநியோக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் கொழும்பு மத்திய தபால் பரிமாற்று பிரிவின் உள்ளக நடவடிக்கைகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி இலங்கை சுங்கத் திணைக்களத்துடன் இணைந்து தபால்கள் மற்றும் பொதிகளை வகையீடு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறெனினும், இன்றைய தினம் தபாலகங்கள் திறந்திருக்காது என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன தெரிவித்துள்ளார்
Related posts:
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை - பொலிஸ்மா அதிபர்!
கர்தினால் மற்றும் மகாநாயக தேரர் ஆகியோருடன் முக்கிய சந்திப்பை நடத்திய ஜனாதிபதி கோட்டாபய!
எழுத்து மூலம் அறிவிக்கப்படுமாயின் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் பய...
|
|
|


