கர்தினால் மற்றும் மகாநாயக தேரர் ஆகியோருடன் முக்கிய சந்திப்பை நடத்திய ஜனாதிபதி கோட்டாபய!

Wednesday, April 29th, 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மகாநாயக தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

இந்த சந்திப்பானது நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கொவிட் 19 நோய்க்கு எதிராக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடிக்கைகளுக்கு மகாநாயக்க தேரரும் கர்தினாலும் பாராட்டியுள்ளனர்.

அத்துடன் நாட்டில் ப்ரவியுள்ள நோய்த்தொற்றை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என்று சமயத் தலைவர்கள் இருவரும் நம்பிக்கை தெரிவித்த நிலையில் , விரைவில் ஊரடங்கு சட்டத்தையும் தளர்த்தக்கூடியதாயிருக்கும் என் ஜனாதிபதி கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது எதிர்வரும் வெசக் பண்டிகையை முன்னிட்டு வீடுகளிலிருந்து சமயக்கிரியைகளில் ஈடுபடுமாறு பௌத்த மக்களுக்கு அறிவிப்பதாக மகாநாயக்க தேரர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கேட்டறிந்த மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னால் உள்ளவர்களை கண்டறிய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியிடம் இதன்போது வலியுறுத்தினார்.

தற்கொலை தாக்குதலின் மூலம் மரணத்தையும் கடந்த நோக்கங்கள் உள்ளதென குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த நோக்கங்களின் பின்னால் உள்ளவர்களை கண்டறிய அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

வீண்விரயங்கள், வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள தேர்தல் பிரச்சார முறைமையில் இருந்த விலகி புதிய தேர்தல் முறைமையொன்றை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார்.

Related posts: