அடுத்த வருடம் மின்சார புகையிரத சேவை!
 Monday, September 4th, 2017
        
                    Monday, September 4th, 2017
            
இலங்கையில் மின்சார புகையிரத சேவை அடுத்த வருடம் ஆரம்பமாகும் என புகையிரத திணைக்களத்தின் உதவி வர்த்தக அத்தியட்சகர் என்.ஜே.இதிபொல தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தத் திட்டத்திற்கு கடன் உதவியை வழங்கியுள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் 60 கோடி டொலர் நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கவுள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ் பாணந்துறையில் இருந்து வெயங்கொட வரை மின்சார ரயில் சேவை அமுல்படுத்தப்படும். இந்த சேவைக்கான நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் பொழுது ரயில் பாதையின் இருமருங்கிலுமுள்ள சட்டவிரோத கட்டமைப்புகள் அகற்றப்படும். பாணந்துறையில் இருந்து வெயங்கொட வரையிலான பகுதியில் புதிய பாதசாரி பாலமொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இந்த சேவைக்கென புதிய அனுமதி சீட்டொன்றும் அறிமுகப்படுத்தப்படும். இரண்டாம் கட்டத்தின் கீழ் வெயங்கொடயிலிருந்து பொல்கஹவ வரையிலும் அதேவேளை பாணந்துறை இருந்து அளுத்கம வரையிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் புகையிரத திணைக்களத்தின் உதவி வர்த்தக அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        