அடுத்த மாதம் எரிபொருளுக்கும் டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் நிவாரணம் அமைச்சர் அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
Tuesday, March 21st, 2023
அடுத்த மாதம் எரிபொருளுக்கும் டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் நிவாரணம் அளிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் மீதான விவாதத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது என்றும் ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி தனக்கு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் தொகை அதிகரிப்பு!
நாளை மின் தடை!
யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர்கள் - தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்ப...
|
|
|


