அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுக்கப்படும் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
Tuesday, April 16th, 2024ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுப்பதாக நம்புவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான மக்கள் இது தொடர்பில் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மகா சங்கத்தினரும் ஏனைய சமயத் தலைவர்களும் தன்னிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதால், அது தொடர்பில் மேலும் சிந்தித்து முடிவெடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
000
Related posts:
இலங்கைக்கு கிடைத்த பாரிய பொக்கிஷம்!
சீனாவின் புதிய 2 நிர்வாக அலகுகளை உருவாக்கும் அறிவிப்புக்கு இந்தியா கடும் எதிர்ப்பு!
சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் - ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபை...
|
|
|


