அடுத்த கட்ட கடன் பெறும் பேச்சு கடினமாக அமையும்!

Sunday, April 16th, 2017

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை அடுத்த கட்ட கடனுதவியை பெறுவதற்கான பேச்சுவார்த்தை இம்மாத இறுதியில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட 1 தசம் 5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் மற்றுமொரு பகுதியை ஸ்ரீலங்காவிற்கு வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

பொருளாதார மறுசீரமைப்புக்கள் எதிர்பார்த்ததை விட மந்த கதியில் நகருக்கின்ற நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை கடுமையானதாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு இலக்குகளை எட்டுவதற்கு இலங்கை தவறியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் சில நிபந்தனைகள் தொடர்பில் இருதரப்புக்கும் இணக்கம் ஏற்படவில்லை என நிதியமைச்சு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நாணய மதிப்பிறக்க அழுத்தம் காணப்படுவதாகவும் அதனை சமாளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நிதியமைச்சின் உயர்மட்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இம்மாத இறுதியில் இந்த நிலைமையை சீர் செய்ய முடியும் எனவும் அந்த அதிகாரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் அடுத்த கட்ட நிதியை பெறும் வகையில் வொஷிங்டனில் நடைபெறும் பேச்சுவார்த்தை கடினமானதாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: