அடுத்த ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மூலம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட இலக்கு – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, October 30th, 2021

விளையாட்டுத் துறைப் பொருளாதாரமாக அடுத்து வரும் ஐந்து வருட காலப்பகுதிக்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்ட உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறையுடன் விளையாட்டுத் துறையை இணைக்கும் புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மஹியங்கனை பிரதேசத்தில் ‘விளையாட்டுப் பொருள் உற்பத்திக் கிராமம்’ ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை பந்தயத்தில் ஈடுபடுவதற்காக கொழும்பு துறைமுக நகரம் அமைக்கப்படவில்லை எனவும் விளையாட்டுத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரம் நிர்மாணிக்கப்படும் போது பந்தயப் பாதையை உருவாக்குவதே பிரதான நோக்கமாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், துறைமுக நகரத்தின் உண்மையான சாத்தியக்கூறுகள் தற்போது புரிந்து கொள்ளப்படு வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு துறைமுக நகரத்தை நாம் ஒரு நேர்மறையான வழியில் பார்க்க வேண்டும்.

இலங்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மூலம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் விளையாட்டுப் போட்டிகள் மூலம் பண மழையை பொழியப் பார்க்கிறது.

இது அதிகளவு சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு உள்ளீர்க்க உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


வெளிநாடு செல்வதாயின் உரிய பயிற்சி வழங்கப்பட வேண்டும் -  இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி!
அஞ்சல் அலுவலகத்தில் 5 இலட்சம் பதிவுத்தபால்கள் தேங்கியுள்ளன - கிடப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரி...
மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில் உறுதிகொள்வோம் - ...