அடுத்த ஆறு மாதங்களுக்கான மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

மின்சார சபையின் அடுத்த ஆறு மாதங்களுக்கான மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் மின்சார சபையின் கணினி கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளுடன் இடம்பெற்றுள்ளது.
மேலும், பராமரிப்பு அட்டவணைகள், மின் தடைகள், நீர்மின் திறன் மற்றும் புதிய போக்குகள் ஆகியவை கலந்துரையாடலின்போது மதிப்பாய்வு செய்யப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புத்தாண்டை முன்னிட்டு 4500 பஸ்கள் சேவையில்!
அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 9 இலங்கையர் கைது!
இலங்கையின் திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு - கொரிய குடியரசின் தொழிலாளர் மற்ற...
|
|