அடுத்த ஆண்டு துறைமுக நகரின் காணிகள் ஏல விற்பனைக்கு – அமைச்சர் சம்பிக்க ரணவக்க!
Thursday, August 24th, 2017
அடுத்த வருடம் கொழும்பு துறைமுக நகரின் காணிகளின் ஏல விற்பனை ஆரம்பிக்கப்படும் என மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மீகொடை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.சகல அதிவேக நெடுஞ்சாலைகளையும் இணைக்கும் வகையில் கொழும்பில் ஒரு மத்திய நிலையம் நிர்மாணிக்கப்படும்.
இஞ்சிக்கடை சந்தி, துறைமுகம் ஊடாக கொழும்பு கோட்டைக்கு புதிய பாதை நிர்மாணிக்கப்படும். அந்த பாதை மல்வத்தை வீதி ஊடாக கோட்டை ரயில் நிலையம் வரை செல்லும். அந்த இடத்தில் இருக்கும் சாமர்ஸ் கலரியில் 9 ஏக்கர் நிலம் உள்ளது.அங்கு பெரிய வர்த்தக கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்படும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை – அரசாங்கம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நிகழ்நிலையில் முன்னெடுப்பு!
நாட்டில் உணவு தட்டுப்பாடு வீதம் குறைவடைந்துள்ளது - அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!
|
|
|


