அடுத்தவாரமும் மூன்று நாட்களுக்கு மட்டுமே பாடசாலை நடைபெறும் – வடக்கில் வாரம் 5 நாட்களும் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Saturday, August 6th, 2022
அடுத்தவாரம் மூன்று நாட்களுக்கு மட்டுமே பாடசாலை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே பாடசாலைகள் நடைபெறும்.
வியாழக்கிழமை போயா தினமாகும். வெள்ளிக்கிழமை நிகழ்நிலை ஊடாக கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை வடக்கு மாகாண அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை அடுத்த வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு வடமாகாண கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
அரிசிக்கான இறக்குமதி வரி குறைந்தும் விலை ஏன் குறையவில்லை- நிதி அமைச்சர் விளக்கம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மஹிந்த ராஜபக்ஷ ஏன் சந்தித்தார்...? என்ன பேசினார்...?
பட்டதாரிகள் நியமனத்தில் போராளிகளுக்கு முன்னுரிமை - வடமாகாண ஆளுநர் !
|
|
|


