இந்திய பிரதமர் நரேந்திர மோடியை  மஹிந்த ராஜபக்ஷ  ஏன் சந்தித்தார்…? என்ன பேசினார்…?

Sunday, May 14th, 2017

இலங்கை வந்த இந்திய பிரதம மந்திரியை ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  அவசர அவசரமாக சந்தித்து இலங்கை அரசியலில் பல ஊகங்களை யும் அதிர்வலைகளையும்  எழுப்பியுள்ளது. மோடியின் இலங்கை விஜய நிகழ்ச்சி நிரலில் இல்லாத, இந்த சந்திப்பு இறுதி நேர ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள இந்திய தூதராலத்தில் கடந்த 11ம் திகதி இரவு இடம் பெற்றிருந்தது.

முன்னறிவிப்பு எதுவும் அற்று இடம் பெற்ற இந்த சந்திப்புப் பற்றி சந்திப்பு நடை பெற்ற பின்னரே நரேந்திர மோடி தங்கியருந்த கொழும்பு ஹோட்டல் தாஜ் சமுத்ராவில் வைத்து இலங்கைக்கான இந்தியத் தூதர் தஞ்சைத் சிங் சரவு 11.45 மணியளவில் ஊடக வியலாளக்ளிடம் தெரவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை அடுத்தே பிரதமர் நரேந்திர மோடி  அவரை சந்திதார் என இந்தியத் தூதர்  அப்போது தெரிவித்தார்.

இந்தியா ஹவுஸ் எனப்படும்கொழும்பில் உள்ள இந்திய தூதராலத்தில் இடம்பெற்ற  இந்தச் சந்திப்பு ஒதுக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.எனவும் இதனால் இது தொடர்பில் 10.45 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்  மாநாடு தாமதமாகியது ,  எனவும் அவர்  தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோடாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் இந்தச் சந்திப்பில் இணைந் திருந்தனர்.

இந்திய தரப்பில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டவல் இந்திய உயர் ஸ்தானிகர் தராஜித் சிங் சந்து ஆகியோர் நரேந்திர மோடியுடனான  இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இரு நாடுகளின் மேம்பாட்டு உறவுகள் பற்றியே இந்தச் சந்திப்பில்  விவாதிக்கப் பட்டதாக  தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் இந்திய உதவியுடன் இடம்பெறும்  அபிவிருத்தி திட்டங்களை பாராட்டியிருந்தார் எனவும் தெரிவித்தார்.

இந்தியா பிரதமர் நரேந்திர மோடியின்  இலங்கைக்கு விஜயத்தை கடுமையாக விமர்சித்திருந்த மஹிந்த அணயின் முகியஸ்தாரன விமல் வீரவன்ச, அவர்களை இந்த திடீர் சந்திப்பு தொடர்பாக கருத்துக் கேட்க  கொழும்பு ஊடகம் ஒன்று  முயற்சித்த தாகவும் அவரின் தொடர்பு கிடைக்கவில்லை எனவும் அந்த ஊடகம் தெர்வித்துள்ளது

Related posts: