அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இலங்கையில்!

Wednesday, November 9th, 2016

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை ஜனவரி மாதத்தில் இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடுவதற்காக கடற்றொழில் அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் இந்தியா சென்றிருந்தனர். இதன்போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மற்றும் மீன்பிடி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.  இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதை இந்திய தரப்பு அதிகாரிகள் இதன்போது ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்து மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சு கூறியுள்ளது.

amaraweera

Related posts: