அடிப்படை உரிமை மனு விசாரணை ஜூலை 14இல்!
Tuesday, February 7th, 2023
பரீட்சை நடைபெறும் காலங்களில் மின்துண்டிப்பை தவிர்க்குமாறு மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, இலங்கை ஆசிரியர் சங்கம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேற்படி மனு மீதான விசாரணை நேற்றைய தினம் நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, அச்செல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றது. அதன்போதே மேற்படி மனுமீதான விசாரணையை எதிர்வரும் 14 ஆம்திகதி முன்னெடுப்பதற்கு தீர்மனிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த மனுவில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளருக்கு மீண்டும் அழைப்பாணையை விடுக்குமாறும் நீதிமன்றத்தில் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தபால் மூல வாக்களிப்பு 22 ஆம் திகதி ஆரம்பம்!
முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்க...
வாகன விபத்துக்களால் இந்த வருடம் 564 பேர் பலி - காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!
|
|
|


