அச்சுவேலி உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இளைஞர் ஒருவர் மீது கோடாரி கொத்து!

Thursday, June 6th, 2024

அச்சுவேலி உளவிக்குளம்  ஆலயத்திற்கு முன்பாக இளைஞர் ஒருவர் மீது இன்று காலை கோடாரி வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38 வயதுடைய அச்சுவேலி உளவிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது கோடாரி வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கோடரி ஒன்றினால் குறித்த இளைஞரை தாக்கியுள்ளனர் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் கையில் பலத்த காயத்துக்கு உள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலைக்கு செல்வதற்காக சென்று கொண்டு இருந்தபோது ஆலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் வைத்து வழி மறித்த கும்பல் இளைஞரை சராமாரியாக தாக்கியதில் குறித்த இளைஞன் கைகளில் பலத்த காயம் அடைந்தார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

000

Related posts: