அசண்டையீனமாக இருந்தால் நான்கு வாரங்களுக்கு பின்னர் அனுபவிக்க நேரிடும் – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண!

Sunday, October 31st, 2021

தற்போது உலகின் பல நாடுகளும் அவதானித்து வரும் A – 30 வைரஸ் தொடர்பில் இலங்கையும் கருத்தில் எடுத்துள்ளதாக மருந்து பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் –

திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் சுகாதார ஆலோசனைகளை புறக்கணிப்பதால் வைரஸ் பரவும் அபாயம் அதிகம் என தெரிவித்துள்ளார்.

“இந்த வகை வைரஸ் தொடர்பில் ஒரு புதிய கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த A 30 வகை ஆனது பைசர், அஸ்ட்ராசெனிகா உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாதது என்று கூறப்படுகிறது. இது பரவினால் பெரும் அசௌகரியம் ஏற்படும் என உலகமே உற்று நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது தொடர்பில் நாமும் அவதானத்துடன் இருக்கின்றோம். கொவிட் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என்று எண்ணி, கொவிட்டுக்கு முன்னரான வாழ்க்கைக்கு செல்வோமாயின் எதிர்வரும் 4 வாரங்களின் பின்னர் அதன் பிரதிபலனை எம்மால் அனுபவிக்க நேரிடும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: