CC 450 என்ஜின் மோட்டார் வண்டிகள் பதிவு செய்யப்படவுள்ளது
Wednesday, March 30th, 2016
இலங்கையில் CC 450 என்ஜின் மோட்டார் வண்டிகள் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மோட்டார் வண்டியின் பதிவு இடம்பெற்று சுமார் இரண்டு வாரங்களுக்கு அதனை சாதாரணமாக போக்குவரத்தில் பயன்படுத்த முடியும் எனவும் மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போது பாதுகாப்புப் பிரிவினர் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த என்ஜினையுடைய மோட்டார் வண்டியினை சாதாரண மக்களும் பயன்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மோட்டார் வாகன திணைக்கள பணிப்பாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்களின் கோரிக்கையினை அடுத்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கூட்டு எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டை நிராகரித்த அரசாங்கம்!
இலங்கையில் இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதார அமைச்சர்!
இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கான தளமாக இலங்கையை பயன்படுத்த எவரும் அனுமதி கிடையாது - வெளிவிவக...
|
|
|


