90 கிராம் நிறைக்குட்பட்ட நண்டுகளைப் பிடிக்காதீர் – கடற்றொழிலாளர் சம்மேளனம் அறிவுறுத்து!

Thursday, August 9th, 2018

கடல் வளத்தைப் பாதுகாப்பதுடன் எதிர்கால சந்ததியினருக்கு கடல் வளத்தைக் கையளிக்கும் நோக்கோடு கடலில் உள்ள சிறிய நண்டுகளை தொழிலாளர்கள் பிடிப்பதை தவிர்க்குமாறு யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டு சமாசங்களின் சம்மேளனம் தெரிவித்தது.

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் பிரதேசங்களில் மீனவர்களால் பிடிக்கப்படும் நீலக்கால் நீந்து நண்டுகள் (வெள்ளை நண்டு) சந்தையில் கூடுதல் விலை கிடைக்கப்பெறுகின்றது. அத்தோடு இலங்கையின் சந்தை வாய்ப்பு அதிகரித்து காணப்படுகின்றமையால் சிறிய நண்டுகளை தொழிலாளர்கள் பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 800 இற்கும் மேற்பட்ட பெண்கள் நண்டுத் தொழிற்சாலை மூலம் வேலைவாய்ப்பை பெறுகின்றார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதாலும் தனியார் நிறுவனம் மீனவர்களிடம் கொள்வனவு செய்யும்போது 90 கிராமிற்கு மேற்பட்ட நண்டை கொள்முதல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: