9 ஆம் திகதி பொன்னாலை வரதராஜப் பெருமாள் திருவிழா ஆரம்பம்!
Saturday, August 6th, 2016
வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் 23 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும், 24 ஆம் திகதி புதன்கிழமை மாலை வேட்டைத் திருவிழாவும், 25 ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருவடிநிலைக் கடலில் தீர்த்தோற்சவம் இடம்பெறும். 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத நூல் கட்டுதல் இடம்பெறும். தினமும் காலை 8 மணிக்கும் மாலை 6 மணிக்கும் உற்சவங்கள் ஆரம்பமாகும். உற்சவ காலங்களில் இரவு 7 மணிக்கு கலை நிகழ்வுகளும் ஆன்மீகச் சொற்பொழிவுகளும் இடம்பெறும்
Related posts:
தரம் 2 வரை படித்த போலி பேராசிரியருக்கு சமாதான நீதவான் பதவி!
ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தால் இன்றுமுதல் மரண தண்டனை - போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவிப்பு!
பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை வலுசக்தி ஆற்றல் கொண்ட மாகாணமாக உருவாகின்றது வடக்கு - அதன் மையமாக பூ...
|
|
|


