7500 கிலோ கழிவு தேயிலையுடன் இருவர் கைது!
Saturday, October 14th, 2017
7500 கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் ஹட்டன் டிக்கோயா பகுதியில் இருவர் சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டள்ளனர்.
ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா தேயிலை தொழிற்சாலை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கழிவு தேயிலை தூளை அனுமதி பத்திரம் இல்லாமல் அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து டிக்கோயா பட்டல்கலை பகுதிக்கு லொறியில் கொண்டு செல்லும் போது பொலிஸாரினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட லொறியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள இருவரையும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
வாள்வெட்டக்கு இலக்காகி குடும்பப் பெண் படுகாயம் - மீசாலை வடக்கில் சம்பவம்!
20 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவு - மூன்று வருடங்களுக்கு வழங்க திட்டம் என நிதி இராஜாங்க...
இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஜெய்சங்க...
|
|
|


