7 சாரதிகளுக்கு 77ஆயிரம் அபராதம்!
Wednesday, February 22nd, 2017
போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை செலுத்திய 7 சாரதிகளுக்கு 77ஆயிரம் அபராதம் மல்லாகம் மாவட்ட நீதிமன்றால் விதிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எதுவித ஆவணங்கள் இன்றி வாகனம் செலுத்திய வளலாய் பகுதியைசேர்ந்த சாரதிக்கு 18ஆயிரம் அபராதமும். 30 மணித்தியாலம் சமுதாய சீர்திருத்த கட்டளைக்கு உட்படுத்துமாறும், அதுபோல் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளின் பின்னால் ஒருவரை ஏற்றிச்சென்றவருக்கு 10ஆயிரம் ரூபா அபராதமும் 30 மணித்தியாலம் சமூக சேவைக்கு உட்படுத்துமாறும், மோட்டார் சைக்கிளை பதிவு செய்யாது இலக்கத்தகடு இன்றி வாகனம் செலுத்திய இளைஞன் ஒருவருக்கு 6ஆயிரம் ரூபா அபராதமும், சுன்னாகம் மற்றும் தெல்லிப்பழை பகுதிகளில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் அபாயகரமாக மோட்டார் சைக்கிள் செலுத்திய மூவருக்கு தலா 12ஆயிரமும் மதுபோதையில் அபாயகரமாக மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கு 7ஆயிரம் அபராதமும் 30 மணித்தியாலம் சமுதாய சீர்திருத்த கட்டளையும் பிற்போடப்பட்டது.
மேற்படி சாரதிகளுக்கு எதிராக மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் அச்சுவேலி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற போதே மேற்படி தண்டனைகள் விதிக்கப்பட்டன.

Related posts:
|
|
|


