65 இலட்சம் மக்கள் காசநோயால் பாதிப்பு – சுகாதார கல்விப் பணியகம்!

இலங்கை சனத் தொகையில் சுமார் 65 இலட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார கல்விப் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் மாத்திரம் பல பிரதேசங்களில் 8,886 காசநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல் சுமார் 4,500பேர் காசநோயை ஏற்படுத்தும் பக்ரீரியாவை அடையாளம் காணும் பரிசோதனையை செய்து கொள்ளாமல் உள்ளனர் என்று சுகாதார கல்விப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் 24ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் ஒழிப்பு மற்றும் நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பணியகம் கூறியுள்ளது.
Related posts:
இணையத்திற்குள் ஊடுருவியவருக்கு தொழில் வழங்க பிரித்தானிய நிறுவனம் இணக்கம்!
சாதாரண தரத்தில் தேர்ச்சி பெறத் தவறியவர்களுக்கு தொழில் வாய்ப்பு - தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பண...
இலங்கையின் ஏற்றுமதிகளை சடுதியாக குறைத்த சீனா!
|
|