6 கிலோ கிராம் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!
Sunday, July 24th, 2016
உடுவில் பிரதேசத்தில் 6 கிலோ கிராம் ஹெராய்னுடன் அளவெட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (23) இரவு மதுவரி திணைக்கள அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இரகசிய தகவல் ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், பருத்தித்துறை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டம்!
இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி பிரதிநிதிகள் - இராணுவ தளபதி சந்திப்பு!
வலுவானது இலங்கை ரூபா - தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!
|
|
|


