52 பாடசாலைகள் மூடப்பட்டது !
Monday, May 23rd, 2016
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சப்ரகமுவ மாகாணத்தின் 52 பாடசாலைகளை காலவரையறை குறிப்பிடாமல் மூட அம் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் 52 பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் 33 பாடசாலைகள் மற்றும் பாதிக்கப்பட்ட 19 பாடசாலைகள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி கேகாலை மாவட்டத்தின் 46 பாடசாலைகளும் இரத்தினபுரி மாவட்டத்தின் 6 பாடசாலைகளும் இவ்வாறு மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஆபத்தான நபர்கள் மற்றும் அவர்கள் தொடர்பான தகவல் வழங்கினால் பணப்பரிசு - புலனாய்வு பிரிவு தகவல்!
நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகள் மாத்திரமே இலங்கைக்கு வருகை தர முடியும் - சுற்றுலா மற்றும் சிவில் விம...
யாழ் கோட்டை பகுதியை சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கு புதிய திட்டங்களை வகுக்குமா...
|
|
|


