மீன் ரின்கள் விற்பனை செய்ய வேண்டாம் !

Thursday, May 31st, 2018

இலங்கைக்கு, சீனாவிலிருந்து கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு 64 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட மீன் ரின்களில் புழு இருப்பதை பொது சுகாதார பரிசோதகர்கள் கண்டு பிடித்ததைத் தொடர்ந்து அந்த கொள்கலன்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தேசிய நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நிறுவன தலைவர் ரஞ்சித் விதானகே தகவல் தெரிவிக்கையில்  சீனாவிலிருந்து கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு கப்பலில் மீன் ரின்கள் அடங்கிய 64 கொள்கலன்கள் கடந்த 27ம் திகதி இலங்கை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது.இதில் சிலவற்றில் புழுக்கள் இருந்ததை பொது சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்துள்ளதைத் தொடர்ந்து அந்த கொள்கலன்களை இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  இதனை சோதனைக்குட்படுத்தப்படும் முன்னரே ஆறு கொள்கலன்களை சுகாதார அமைச்சு உத்தரவின் பேரில் துறைமுக அதிகாரிகள் இறக்குமதியாளர்களிடம் விடுவித்து விட்டதாக குறிப்பிட்டார்.  பொது சுகாதாரத்துறையினரின் பரிசோதனைக்கு பின் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட மீன் ரின்களை பொதுமக்கள் பயன்படுத்தவோ விற்பனையாளர்கள் விற்பனை செய்யவோ வேண்டாம் என ஊடகம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விடயம் சம்பந்தமாக சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி சரத் அமுனுகம தெரிவிக்கையில் சுகாதார அதிகாரிகள், மற்றும் துறைமுக அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து  இந்த மீன் ரின்களை இறக்குமதி செய்த நிறுவனங்கள் அவற்றை மீள பெற்றுக்கொள்ள சம்மதித்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts: