50 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் கையிருப்பில்!

Monday, November 21st, 2016

நெல்லை விற்பனை செய்வதற்கான கேள்வி மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ள பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சின் உபகுழுவில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்.பி.திசாநாயக்க தெரிவிக்கையில் 1 இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை விற்பனை செய்வதற்காக கேள்வி மனுக்கள் கோரப்பட்டிருந்தன. 269 கொள்வனவுக்காரர்கள் இதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

கொள்வனவு செய்யப்பட்ட விலையிலும் பார்க்க அதிகரித்த விலை இம்முறை கேள்வி மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவித்த அவர் பகிரங்க சந்தைக்கு இவற்றை விநியோகிப்பதன் மூலம் சந்தையில், அரிசியின் விலையை கட்டுப்படுத்தக்கூடியதாக அமையுமென்றும் அவர் கூறினார்.

உணவுப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் மேலதிகமாக 50 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் கையிருப்பில் இருப்பதாக குறிப்பிட்ட  நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர்  கீரி சம்பா, சம்பா, நாட்டரிசி ஆகிய ரக அரிசி வகைகளுக்கு இம்முறை அதிக விலை கிடைத்துள்ளதாகவும் மேலும் கூறினார்.

 94e3e6edde1500bf73d788ecb233f180_XL

Related posts: