4,500 புசல் விதை நெல் இம்முறை விநியோகம் காலபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு!

Saturday, October 29th, 2016

யாழ்.குடாநாட்டில் விதை உற்பத்திக் கூட்டுறவுச்சங்கம் காலபோக நெற்செய்கைக்காக இம்முறை 4ஆயிரத்து 500புசல் விதை நெல்லை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது. விவசாய ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட – முளைதிறன் கூடிய விதை நெல்லையே சங்கம் விவாசாயிகளுக்கு பெற்று வழங்கியுள்ளதாக சங்கத்தின் பொது முகாமையாளர் ரி.ரவிமயூரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு காலபோகத்தின்போது பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட விதைநெல்லைச் சங்கம் பாதுகாப்பாகக் களஞ்சியப்படுத்தியது. இந்த நெல் பின்னர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு முளைதிறன் கூடியது எனவும் உறுதி செய்யப்பட்டது. இந்த விதை நெல் கமநல சேவை நிலையங்கள் ஊடாகவும் விநியோகிக்கப்பட்டது. தற்போது விதை நெல் முற்றாக விநியோகித்து முடிக்கப்பட்டுள்ளது. அநேகமான விவசாயிகள் இந்த விதை நெல்லைப் பெற்றுச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

الارز-720x480

Related posts: