4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Tuesday, March 28th, 2017

மேலும் 4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஐர் ஜென்ரல் மகேஸ் சேனாநாயக்கா தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயகத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஐர் ஜென்ரல் மகேஸ் சேனாநாயக்கா பிரியாவிடை நிகழ்வு நேற்று (27) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஐர் ஜென்ரல் மகேஸ் சேனாநாயக்கா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தேசிய பாதுகாப்பு படையினர் யாழ் மாவட்ட மக்களுக்கு ஒரு நம்பகரமான செயற்றிட்டத்தினை முன்னேடுத்துள்ளனர். மக்களின் பயன்பாடக்கூடிய வகையில் காணிகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.

எனவே எதிர்வரும் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தின் காங்கேசன் துறைமுகப் பகுதியின் சில இடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவர் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளைத் தளபதி இராணுவ தலைமைப்பீட உயர் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று செல்லுகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த சந்திப்பில் எதிர்வரும் வருடங்களில் மீள்குடியேற்ற வேண்டிய இடங்களின் அடையாளம் காணுதல், அதற்கான முன்மொழிவுகளும் ஏற்படுத்திக்கொள்ளல்.

மேலும் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களில் மக்களின் தேவைப்பாடுகள், இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பின் மூலமாக யாழ் மாவட்ட மக்களின் சமகால செயற்பாடுகள் தொடர்பாகவும் இதில் கலந்துறையாடப்பட்;டதாக யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் தேவநாயகன் தெரிவித்தார்.

Related posts:


பாடசாலை மாணவர்களுக்கு இயன்றவரை பகலுணவு வழங்க முயற்சி - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
எரிபொருளின் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன பேச்சாளர் தெரிவ...
இலங்கையின் பொருளாதார வலுவாக்கல் முயற்சிக்கு தொடர்ந்தும் பங்களிப்பு வழங்குவோம் - ஜனாதிபதியிடம் மீண்டு...